×

எல்லையில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு சீன மொழியில் பேச பயிற்சி; ராணுவம் வேகம்

புதுடெல்லி: இந்திய ராணுவ வீரர்களுக்கு சீனாவின் மான்டரின் மொழியை கற்றுத் தரும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே எல்லையில் மோதல் நடந்தது. இந்நிலையில், எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு சீன மொழியான மான்டரின் மொழி பயிற்சி அளிக்க ராணுவம் முடிவு செய்தது. சீன ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் சூழ்நிலை ஏற்படும் போது சீன அதிகாரிகளுடன் பேசும் வகையில் இந்திய வீரர்களுக்கு மான்டரின் மொழி கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் இளநிலை மற்றும் முதுநிலை ராணுவ கமாண்டர்களுக்கு சீன மொழி பயிற்றுவிக்கப்படுகிறது.  ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், ‘‘கிழக்கு, வடக்கு மற்றும் மத்திய ராணுவ பிரிவுக்கு உட்பட்ட  பள்ளிகளில் மான்டரின் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, ராணுவத்தில்  இந்த மொழியில் தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் பலர் இந்த பயிற்சியை அளித்து வருகின்றனர்,’ என தெரிவித்தன….

The post எல்லையில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு சீன மொழியில் பேச பயிற்சி; ராணுவம் வேகம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...